உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / " அ.தி.மு.க., தினகரன் வசமாகும்" - அண்ணாமலை அதிரடி ஆரூடம்

" அ.தி.மு.க., தினகரன் வசமாகும்" - அண்ணாமலை அதிரடி ஆரூடம்

தேனி: தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிவுக்குப்பின்னர் அதிமுக தினகரன் வசமாகும், இபிஎஸ் தலைமையிலான அதிமுக இருக்காது, காணாமல் போகும் என தேனியில் அமமுக பொதுசெயலர் தினகரனை ஆதரித்து பிரசாரம் செய்த பாஜ., தலைவர் அண்ணாமலை அதிரடியாக பேசினார்.பிரசாரத்தில் அண்ணாமலை பேசியதாவது;https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ici6h1ie&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

புதிய அரசியல்

பா.ஜ., கூட்டணியில் அனைத்து தொகுதிகளிலும் மூத்த தலைவர்களே போட்டியிடுகின்றனர். தேனி தொகுதியில் டிடிவி தினகரன் சார்பில் நிற்கும் வேட்பாளர் கூட வெற்றி பெறுவார். ஆனால் டிடிவி தினகரன் நேரடியாக களம் இறங்க காரணம், பா.ஜ., 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் புதிய அரசியலை மக்களுக்கு காட்ட வேண்டும்.

அதிமுகவும், திமுகவும் வேறு வேறு

போலியான தலைவர்களை தொண்டர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். தேனியில் டிடிவி தினகரனை தோற்கடிக்க வேண்டும் என இரண்டு வேட்பாளர்கள் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். இபிஎஸ் தலைமையிலான அதிமுகவும், திமுகவும் வேறு வேறு அல்ல, ஒன்றுதான். ஆனால் தொண்டர்கள் ஒன்று சேரவில்லை. ஏப்ரல் 19ம் தேதி, தேனி தொகுதியில், அதிமுக தொண்டர்களும் தினகரனுக்கே ஓட்டளிப்பார்கள். டிடிவி தினகரனுக்கு முழுமையான ஆதரவை கொடுக்க வேண்டும்.

அதிமுக தினகரன் வசமாகும்

16 ஆண்டுகளுக்குப்பின் தினகரன் வனவாசத்தை முடித்து விட்டு அரசியல் களத்திற்கு வந்துள்ளார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் தினகரன் பக்கமே உள்ளனர். இபிஎஸ் செய்த துரோகத்தை மக்கள் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டார்கள். இபிஎஸ் கட்சியை கான்ட்ராக்டர்களுக்கு தாரை வார்த்து விட்டார். அதிமுக தினகரன் கையில் இருந்திருந்தால் ஸ்டாலின் முதல்வராகி இருக்க மாட்டார். விரைவில் அதிமுக தினகரன் வசமாகும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

அண்ணாமலை அறியாப்பிள்ளை

இது குறித்து ஜெயக்குமார் கூறியிருப்பதாவது: அரசியலில் அண்ணாமலை ஒரு அறியாப்பிள்ளை. டிடிவி தினகரனுக்கும், பா.ஜ., இடையே என்ன ரகசிய ஒப்பந்தம் உள்ளது என தெரியவில்லை. தமிழகத்தில் மதவாதம், ஜாதிவாத அரசியலுக்கு மக்கள் ஆதரவு தந்தது இல்லை. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

G.sukumaran
ஏப் 13, 2024 22:00

பாஜக தலைவர் அண்ணாமலை என்பவர் அறியாமை பேசிக் கொண்டிருக்கிறார் இது அண்ணாமலைக்கு தேவையில்லாத வேலை.


தமிழ்வேள்
ஏப் 13, 2024 16:43

இரட்டை இலைக்கு தனியாக எந்த மவுசும் கிடையாது , எம்ஜிஆர் ,ஜெயலலிதா என்ற தனிப்பட்ட ஆளுமைகளால் தூக்கி பிடிக்கப்பட்டதால்தான் , இரட்டை இலை மக்களிடம் அறிமுகம் ஆனது இரண்டு தொடர்ந்த தேர்தல்களில் தோல்விமுகம் கண்டால் , இரட்டை இலையை எவனும் சீந்தக்கூட மாட்டான் இரட்டை இலைக்கு எந்த தனி சிறப்பும் இல்லை என்று நிறுவப்போவது எடப்பாடி பழனிசாமியின் முயற்சி மற்றும் தொண்டுகளால் மட்டுமே


A. Kumar
ஏப் 13, 2024 14:49

தினகரன் வளமாகும் கண்டிப்பாக


Natchimuthu Chithiraisamy
ஏப் 13, 2024 14:15

அவசரப்பட வேண்டாம்


V GUNASEKARAN
ஏப் 13, 2024 14:00

June-4 க்குப்பின் இவன் BJP யில் இருந்து தூக்கி வீசப்படுவார்


S Rajasekar
ஏப் 13, 2024 13:59

தினகரனை சப்போர் பண்ணுவதன் மூலம் தானும் ஒரு சராசரி அரசியல்வாதி என ஒப்புக் கொண்டுள்ளார்


GMM
ஏப் 13, 2024 13:37

தேர்தலுக்கு பின் எடப்பாடி பழனிசாமி வசம் அண்ணா திமுக இருக்காது ஸ்டாலின் வசம் திமுக தடுமாறும் கட்சி தலைமைக்கு ஊழல் புரிந்து , சிறை வாசம் மிகுந்த ஏழ்மையில் இருந்த திராவிடர்கள் சுக போக வாழ்க்கை வாழ்ந்தவர்கள் சினிமாவில் கூட நடிக்க மாட்டார்கள்


ஆரூர் ரங்
ஏப் 13, 2024 13:13

யாரால் அதிமுகவுக்கு அழிவு என்பதை சற்று சூசகமாகக் கூறலாமே.


தமிழ்நாட்டுபற்றாளன்
ஏப் 13, 2024 13:46

ADMK தொண்டன் அனைவரையும் ஒன்று சேர்த்து விட்டார் இதுவே இவர்களுக்கு பாதகம்


S Rajasekar
ஏப் 13, 2024 13:09

அண்ணாமலை ஊழலுக்கு எதிரானவர் என்று பேசுகிறார் ஆனால் ஆட்சியில் எந்த பதவியில் இல்லாமல் ஊழல் மூலம் கொள்ளையடித்து பணம் சேர்த்த தினகரனுக்கு ஆதரவாக பேசும் போது எல்லோரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் என்று தெரிகிறது


Velan Iyengaar
ஏப் 13, 2024 12:49

நம்பி வருபவர்களை இப்படி தான் நட்டாற்றில் விடுவீர்களா ?? கறிவேப்பிலை தானா ??


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி