அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியின்முதல் தேசிய கருத்தரங்கம்- கிராப்ட்--25
கருத்தரங்கம் சேலம், விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின், அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியின் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியல் துறை சார்பில், முதல் தேசிய கருத்தரங்கம் -கிராப்ட்--25 நடந்தது.விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் அறிவுறுத்தலின்படி, கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் சிறப்புரை ஆற்றினார். இயக்குனர் பேராசிரியர் ஆன்ட்ரூ ஜான் வரவேற்றார். ஆறுபடை வீடு மருத்துவ கல்லுாரி ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் சர்மான் சிங், டாக்டர் திவ்யா இளங்கோவன், அடான் ஹாஸ்பிடல் குவைத், டாக்டர் புவனேஸ்வரி, சவிதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ், டாக்டர் முருகன் நந்தகோபால், லைப் செல் லேப் சென்னை, டாக்டர் அகிலேஷ் ரவி சந்திரன் சவிதா மெடிக்கல் காலேஜ் சென்னை, டாக்டர் இமானுவேல் பிராட் ஹாஸ்பிடல் சென்னை, ஆறுபடை வீடு மருத்துவ கல்லுாரி உயிர் வேதியியல் துறை தலைவர் டாக்டர் மஞ்சு ஆகியோருடன் எட்டு அறிவியல் அமர்வுகள் நடந்தன. கல்வி ஒருங்கிணைப்பாளர் வளர்மதி நன்றி கூறினார். கட்டுரை, சுவரொட்டி மற்றும் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கருத்தரங்கில், 266 மாணவ மாணவியர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சந்துரு, மருத்துவ ஆய்வக தொழில் நுட்பவியல் துறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அனிதா, உதவி பேராசிரியர்கள் கிரன்குமார், சுஜின், டாக்டர்.வெங்கடேசன், சுதாகர், காயத்ரி, டாக்டர் நித்யா மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.