உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்: போலீசார் அலட்சியம்

நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்: போலீசார் அலட்சியம்

வாழப்பாடி;வாழப்பாடியில், தம்மம்பட்டி, உளுந்துார்பேட்டைகளில் நெஞ்சாலையோரங்கள், தினமும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் நேற்று காலை, 11:40 மணி முதல், வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷன் முன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து தம்மம்பட்டி, உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலைகளிலும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் சேலம் நோக்கி செல்ல முயன்ற ஆம்புலன்ஸ், ஒரு நோயாளியுடன் காத்திருந்த அவலமும் நேரிட்டது. அப்போதும் நெரிசலை சீரமைக்க, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு வழியாக மதியம், 12:30 மணிக்கு மேல், போக்குவரத்து மெல்ல மெல்ல சீரானது. அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை