உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரளி பூ பறிக்க சென்ற மூதாட்டி பாம்பு கடித்து பலி

அரளி பூ பறிக்க சென்ற மூதாட்டி பாம்பு கடித்து பலி

பனமரத்துப்பட்டி : மல்லுார் அருகே, அரளி பூக்களை பறிக்க சென்ற மூதாட்டி, பாம்பு கடித்து இறந்தார். சேலம் மாவட்டம், மல்லுார் அருகே, ச.ஆ.,பெரமனுார் கிராமத்தை சேர்ந்தவர் அழகுமணி, 60. இவர் விவசாய கூலி வேலை செய்து வந்தார். கடந்த, 27ல், அதிகாலை அரளி பூக்களை பறிக்க இவர் வயலுக்கு சென்றுள்ளார். அப்போது, அவரை பாம்பு தீண்டியது. ஆபத்தான நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், நேற்று காலை உயிரிழந்தார். மல்லுார் போலீசார் விசா-ரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி