மேலும் செய்திகள்
ரயிலில் மாடு சிக்கி சேவை பாதிப்பு மக்கள் ஆவேசம்
14-Sep-2025
சேலம்: ஓடும் ரயிலில், ஐ.டி., பெண் ஊழியரிடம் சில்மிஷம் செய்த, ஜவுளி கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவன, 24 வயது பெண் பணியாளர், அவரது சொந்த ஊரான ஈரோடு செல்ல, நேற்று முன்தினம் இரவு, குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்பதிவு பெட்டியில் பயணித்தார். தர்மபுரியை கடந்து, ரயில் வந்து கொண்டிருந்தபோது, அவரிடம் ஒருவர், பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டார். அப்பெண் கூச்சலிட, சக பயணியர், அந்த நபரை பிடித்து, சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கூறினர். சேலத்துக்கு, நேற்று காலை, 4:00 மணிக்கு ரயில் வந்த போது, பெண்ணிடம் அத்துமீறியவரை ரயில்வே போலீசார் பிடித்து சென்று விசாரித்தனர். அவர், ஆந்திர மாநிலம், சித்துாரை சேர்ந்த ஜவுளி கடை உரிமையாளர் சங்கர், 45, என்பதும், வியாபாரம் தொடர்பாக ஈரோடுக்கு செல்லும் போது, இச்செயலில் ஈடுபட்டதும் தெரிந்தது. விழுப்புரம் சென்னையை சேர்ந்த பெண், நாகர்கோவிலில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம், நாகர்கோவில் - தாம்பரம் செல்லும் ரயிலில் திரும்பி கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 1:40 மணிக்கு ரயில், மேல் படுக்கையில் பயணித்த தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், பெரிய கோவிலான் குளத்தை சேர்ந்த ராமதுரை என்பவர் மகன் விக்னேஷ், 25, அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அந்த பெண் கூச்சலிட்டார். விழுப்புரம் ரயில் நிலைய பெண் தலைமை காவலர் சாமுண்டீஸ்வரியிடம், பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விக்னேைஷ கைது செய்தனர். அவர், சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில், பணிபுரிகிறார்.
14-Sep-2025