சேலம்: அ.தி.மு.க.,வில், சேலம் மாநகர், மாவட்ட கட்டுமான பிரிவு அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.அதன்படி மாவட்ட செயலர் வீரப்பன், தலைவர் ராஜா, துணைத்தலைவர்கள் மாதையன், சின்னதம்பி, ராமலிங்கம், மணிகண்டன், இணை செயலர்கள் ராஜா, ரமேஷ், வெங்கடாஜலம், மூர்த்தி, சுசீந்திரன், மஞ்சை நடராஜன், நடேசன், துணை செயலர்கள் சையத் முஸ்தபா, ஜெயபிரகாஷ், முரளி கண்ணன், கந்தசாமி, சுரேஷ், அம்மாசி, பொருளாளர் பார்த்திபன் ஆகியோர், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்.,சை, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.அப்போது சேலம் மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம், சேலம் தெற்கு தொகுதி, எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், முன்னாள் எம்.பி., பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., செல்வராஜ், பகுதி செயலர்கள் மாரியப்பன், பாலு, சரவணன், முருகன், யாதவமூர்த்தி, ஜெயபிரகாஷ், சண்முகம், பாண்டியன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலர் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.