| ADDED : பிப் 15, 2024 10:22 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளியில் ஐம்பெரும் விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் கோடீஸ்வரன் வரவேற்றார். ஆண்டு விழாவுக்கு வட்டார கல்வி அலுவலர் கிரிஜா தலைமை வகித்தார். அதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பால், பள்ளி குழந்தைகளின் கையெழுத்து பெட்டகம் வழங்கினார்.தொடர்ந்து, 5ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. முன்னாள் மாணவர் மன்றம் தொடங்கப்பட்டது. 'கனவு ஆசிரியர்' விருது பெற்ற அப்பள்ளி ஆசிரியர் தெய்வநாயகத்துக்கு பாராட்டு விழா நடந்தது. இதையடுத்து கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மேலாண் குழுவினர், பெற்றோர் பங்கேற்றனர்.அதேபோல் தாசநாயக்கன்பட்டி அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா, வட்டார கல்வி அலுவலர் கிரிஜா தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் சிவசக்தி வரவேற்றார். விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. எஸ்.பி.ஜ., வங்கி மேலாளர் மோகன்ராஜ், கணினி, சேலம் ஜெ.சி.ஜ., தலைவர் லிங்கேஸ்வரன், 'வெப் கேமரா'வை பள்ளிகளுக்கு வழங்கினார். சின்னையாபுரம் அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா, பள்ளிக்கு நிலம் கொடுத்த ராஜா, மதிவேந்தன் தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் மங்கை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.