உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு பள்ளிகளில் ஆண்டு விழா

அரசு பள்ளிகளில் ஆண்டு விழா

தாரமங்கலம் : தாரமங்கலம், தோ.கோணகாப்பாடி அரசு துவக்கப்பள்ளயில் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை தமிழரசி தலைமை வகித்தார். அதில், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளிக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. மேலாண் குழு உறுப்பினர்கள், பெற்றோர், மக்கள் பங்கேற்றனர். அதேபோல் வனிச்சம்பட்டி நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ஆசைத்தம்பி தலைமையில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.கரகாட்டம்கொளத்துார், காவேரிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா, தலைமை ஆசிரியை தமிழ்செல்வி தலைமையில் நடந்தது. அதில், மாணவ, மாணவியர் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் ஆடி அசத்தினர். மேலும் சிறப்பாக படித்த, நடனம் ஆடிய மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஓமலுார் அருகே பல்பாக்கி அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா தலைமையாசிரியை சசிகலா தலைமையில் நடந்தது. தொடர்ந்து முன்னாள் மாணவர் சங்கம் தொடக்க விழா நடந்தது. வட்டார வள மேற்பார்வையாளர் தனுஜா பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை