மேட்டூர் அணையில் தேங்கிய பாசி படலம் துர்நாற்றத்தை போக்க நுண்ணுயிரி தெளிப்பு
மேட்டூர்: மேட்டூர் அணையில் தேங்கிய பாசி படலத்தால் உருவான துர்-நாற்றத்தை போக்க, திறனுாட்டிய நுண்ணுயிரி தெளிக்கப்பட்டது.மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நேற்று நீர்-மட்டம், 116.22 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 3,459 கனஅடி நீர் வந்தது. கடந்த, 6ல் வினாடிக்கு, 1,000 கனஅ-டியாக இருந்த அணை நீர்திறப்பு, 7ல், 3,000 கனஅடி, நேற்று காலை, 6,000 கனஅடி என அதிகரிக்கப்பட்டது.இந்நிலையில் அணை நீர்பரப்பு பகுதியில் பச்சைப்பசேல் என பாசி படலம் கரை ஒதுங்கியுள்ளது. அதில் இருந்து துர்நாற்றம் வீசியதால், கரையோர கிராம மக்கள் அவதிப்பட்டனர். இதனால் நேற்று முதல்கட்டமாக, மேட்டூர் அணை நீர்வளத்துறை ஊழி-யர்கள் மூலம், 16 கண் மதகு பகுதியில் தேங்கி நின்ற பாசி பட-லத்தை அகற்ற, திறனுாட்டிய நுண்ணுயிரி தெளிக்கப்பட்டது. அந்த நுண்ணுயிரி, துர்நாற்றத்தை உருவாக்கும் பாக்டீரியாக்கள், பாசி படலங்களை அழித்து விடும். தொடர்ந்து அணை கரை-யோர பகுதியில் தேங்கி நிற்கும் பாசி படலங்களை அழிக்க, திற-னுாட்டிய நுண்ணுயிரி தெளிக்கப்படும் என, நீர்வளத்துறை மேட்டூர் அணை பொறியாளர்கள் தெரிவித்தனர்.