உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திறனறி தேர்வு முடிவு வெளியீடு: மாணவர் விபரம் சரிபார்க்க அறிவுரை

திறனறி தேர்வு முடிவு வெளியீடு: மாணவர் விபரம் சரிபார்க்க அறிவுரை

சேலம், தமிழகத்தில் கடந்த அக்., 11ல், தமிழ் இலக்கிய திறனறி தேர்வு நடத்தப்பட்டது. 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பிளஸ் 1 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்களில், 1,500 பேர் தேர்வு செய்யப்பட்டு, இரு ஆண்டுக்கு, மாதந்தோறும், 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இத்தேர்வு முடிவு, நேற்று இணையத்தில் வெளியிடப்பட்டது.அதன் முடிவை, பதிவெண், பிறந்த நாளை பதிவிட்டு, மாணவர்கள் பெறலாம். தேர்வு பெற்ற மாணவர்களுக்கு, வங்கி கணக்கு மூலம் உதவித்தொகை வழங்கப்படும். அதனால், 'தேர்வு பெற்ற மாணவர்கள், பெயர், முகப்பெழுத்து, பிறந்த நாள், பள்ளி பெயர் உள்ளிட்ட விபரங்களை மீண்டும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். பிழை இருப்பின், அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு தேர்வு உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி, இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ