உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் கலைத்திருவிழா கொண்டாட்டம்

ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் கலைத்திருவிழா கொண்டாட்டம்

தலைவாசல்: தலைவாசல், வீரகனுார் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்-பள்ளியில், கே.ஜி., முதல், 9ம் வகுப்பு வரையான மாணவர்க-ளுக்கு, 'கல்வி மற்றும் கலைத்திருவிழா', கடந்த, 23, 24ல் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைவர் லஷ்மி நாராயணன் தலைமை வகித்து, ''மாணவர்கள் தனித்திறமை, கலைத்திறமையை வெளிப்படுத்த வாய்ப்பாக, இந்த விழா அமையும்' என்றார்.செயலர் செல்வராஜு, 'இப்பள்ளி யில் படித்த, 316- மாணவர்கள், அரசு மருத்துவ கல்லுாரி, பொறியியல் கல்லுாரிகளில் இடம் பெற்றுள்ளனர்' என தெரிவித்தார்.பள்ளியின் கல்வி குழு ஆலோசகர் பழனிவேல், ''ஒழுக்கத்துடன் கூடிய கல்வியும், பல்வேறு கலைகளையும் கற்று, முன்மாதிரி-யான மாணவர்களாக திகழ வேண்டும்,'' என்றார்.ராகவேந்திரா சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் ஜெரினாபேகம், மாணவர்களின் கலைத்திறனை பாராட்டி, அவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களை பாராட்டினார். முன்னதாக பள்ளி முதல்வர் ஹேமலதா, விழாவுக்கு வந்த, பாட்டு பட்டிமன்ற நடுவர், டாக்டர் லட்சுமணனை வரவேறார். அவர், 'எதிர்காலத்தில் நல்ல தலைவர்களாக மாணவர்கள் உரு-வாக வேண்டும். தன்னம்பிக்கை, துணிச்சலோடு வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும்' என அறிவுறுத்தினார்.பள்ளியின் பொருளாளர் பிரபா, கல்வி குழு ஆலோசகர் இளை-யப்பன், இணை செயலர் ராமலிங்கம், கல்விக்குழு இயக்குனர் ராஜா, இயக்குனர் ராதாகிருஷ்ணன், ராஜேஸ்வரி, பாஸ்கரன், ஜெயசுமதி, ராணி சிவாஜி, பள்ளி இயக்குனர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்