உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கையிருப்பு உரங்களில் குளறுபடி உதவி இயக்குனர் எச்சரிக்கை

கையிருப்பு உரங்களில் குளறுபடி உதவி இயக்குனர் எச்சரிக்கை

சேலம்,சேலம் வேளாண் தகவல், தர கட்டுப்பாடு உதவி இயக்குனர் கவுதமன் அறிக்கை:சேலம் மாவட்டத்தில் உர விற்பனை உரிமம் பெற்றுள்ள தனியார், கூட்டுறவு விற்பனை நிலையங்கள், உண்மையாகவே கையிருப்பு உள்ள உரங்களை பராமரிப்பது அவசியம். விவசாயிகளின் ஆதார் எண் அடிப்படையில் தேவைக்கு ஏற்ப, உரம் விற்க வேண்டும். விற்பனைக்கு பின் உரிய அளவில் உர இருப்பை பதிவேடு, இணையதளத்தில் பராமரித்து உண்மை இருப்பை சரியாக கணக்கீடு செய்ய வேண்டும். கையிருப்புக்கும், வலைதள இருப்புக்கும் வேறுபாடு இருந்தால் உர விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் யுரியா, 4,442 டன், டி.ஏ.பி., 2,227 டன், பொட்டாஷ், 16:21 காம்ப்ளக்ஸ் உர வகைகள், 7,826 டன், சூப்பர் பாஸ்பேட் உர வகைகள், 1,019 டன் என, 17,115 டன் தனியார், கூட்டுறவு நிறுவனங்களில் இருப்பு உள்ளன. அதனால் விவசாயிகளுக்கு எந்த வித தட்டுப்பாடின்றி உரம் வினியோகிக்க வேண்டும். அப்பணி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை