உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொழிலதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி

தொழிலதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி

சேலம் : சேலம் அழகாபுரத்தில், தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.சேலம் அழகாபுரம், ரெட்டியூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் செங்கோட்டுவேல், 80, தொழில் அதிபர். சேலம் நான்கு ரோட்டில் சாமுண்டி காம்ப்ளக்ஸ் உரிமையாளர். இவரது மனைவி இந்திரா, 71, இவர்கள் இருவரும் வீட்டில் கடந்த, 7ம் தேதி இரவு படுத்து துாங்கியுள்ளனர். அதிகாலை சமையல் அறையில் ஆள் நடமாடும் சப்தம் கேட்டுள்ளது. இருவரும் சென்று பார்த்த போது, அங்கிருந்த இருவர் கதவை திறந்து கொண்டு, பின்புறமாக ஓட்டம் பிடித்தனர்.புகார் அடிப்படையில், அழகாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். கண்காணிப்பு கேமரா பார்த்தபோது, கொள்ளையடிப்பதற்காக சமையல் அறை புகை போக்கி துவாரம் வழியே இரண்டு பேர் உள்ளே குதித்தது தெரியவந்தது. இருவரும், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களாக இருக்கலாம் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை