உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கிய ஏட்டு 6 மாதத்துக்கு பின் சரண்டர்

லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கிய ஏட்டு 6 மாதத்துக்கு பின் சரண்டர்

சேலம்: சேலத்தில், ரேஷன் அரிசி கடத்தலை கண்டு கொள்ளாமல் இருக்க, வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கிய, சிவில் சப்ளை சி.ஐ.டி., ஏட்டு ஆறு மாதத்துக்கு பின் நேற்று நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.சேலம், சிவதாபுரத்தை சேர்ந்த ரேஷன் அரிசி வியாபாரியிடம், வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதற்கு லஞ்சம் பெற்றதாக, கடந்த டிசம்பரில் சேலம் சிவில் சப்ளை சி.ஐ.டி.,யில் பணியாற்றும் பெண் ஏட்டு பிரபாவதி, ஏட்டு மணி ஆகியோர் மீது கடந்த, டிச.,21ல் சேலம் விஜிலென்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.அன்றைய தினம் சூரமங்கலத்தில் உள்ள, சிவில் சப்ளை சி.ஐ.டி., அலுவலகத்தில் சோதனை மேற் கொண்டு ஏட்டு பிரபாவதியை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஏட்டு மணி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.இந்நிலையில் நேற்று அவர், சேலம் கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) தனலட்சுமி முன் சரண் அடைந்தார். அவரை, 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ