உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பாரம்பரிய கலாசாரம் பள்ளியில் விழிப்புணர்வு

பாரம்பரிய கலாசாரம் பள்ளியில் விழிப்புணர்வு

சேலம்: பள்ளி கல்வித்துறை உத்தரவுப்படி, மகாகவி பார-தியார் பிறந்தநாளை ஒட்டி, சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 6 முதல், 10ம் வகுப்பு மாணவியருக்கு தமிழர்களின் பாரம்பரிய கலாசாரம், நாட்டுப்புற கலை, உணவு, உடை, மொழி, இனங்கள் குறித்து, கலைக்குழுக்கள் மூலம் அறிந்து கொள்வதற்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாணவியர் பலர், பாரம்பரிய உடைகள் அணிந்து பங்கேற்றனர். சில மாணவியர், குழுக்களாக இணைந்து கேழ்வரகு, களி, கம்மங்கூழ், கடலை உருண்டை, எள் உருண்டை, சிறு தானிய கஞ்சி, கீரை வகைகளை சமைத்து காட்சிப்படுத்தி இருந்-தனர். கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கும்மி ஆடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 'தமிழர் பாரம்பரியம்' தலைப்பில் பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ