உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பட்டாசு தொழிலாளருக்கு விழிப்புணர்வு பயிற்சி

பட்டாசு தொழிலாளருக்கு விழிப்புணர்வு பயிற்சி

சேலம்: தாரமங்கலத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி நேற்று நடந்தது. சேலம் தொழிலக பாதுகாப்பு, சுகாதாரம் இணை இயக்குனர் தினகரன் தலைமை வகித்தார். அதில் பாதுகாப்பான முறையில் பட்டாசு உற்பத்தி செய்வதற்கான வழிமுறை, விபத்து ஏற்படுவதற்கான காரணங்கள், விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகள், கடைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் விளக்கி பேசினர். இதில் பட்டாசு விற்பனையாளர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ