பிறந்து சில மணி நேரமானஆண் சிசு சாக்கடையில் வீச்சு
பிறந்து சில மணி நேரமானஆண் சிசு சாக்கடையில் வீச்சுகெங்கவல்லி,கெங்கவல்லியில், பிறந்து சில மணி நேரமான ஆண் சிசுவை சாக்கடையில் வீசிய நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கெங்கவல்லி டவுன் பஞ்சாயத்து, 10வது வார்டு, சப்பாணி தெருவில் உள்ள சாக்கடையில் நேற்று, மாலை, 4:00 மணியளவில் தொப்புள் கொடியுடன் குழந்தை கிடந்தது. அங்கு காகம், நாய்கள் சுற்றித்திரிந்ததால், பொதுமக்கள் பார்த்தனர். அப்போது, ஐந்து மாதம் கொண்ட ஆண் சிசு இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கெங்கவல்லி போலீசார், ஆண் சிசு உடலை மீட்டு பிரேத சோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாக்கடையில் சிசுவை வீசிச் சென்ற நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'கருவில் ஐந்து மாத வளர்ச்சியில் இருந்த சிசுவை பிறந்தவுடன் சாக்கடையில் வீசியுள்ளனர். இவை, கருக்கலைப்பு செய்தபோது, இறந்த நிலையில் பிறந்திருக்க கூடும். இந்த சிசுவை, சாக்கடையில் வீசிய நபரை தேடிவருகிறோம்,' என்றனர்.