சாலையில் கடைக்கு தடை
தாரமங்கலம்: தாரமங்கலம் தினசரி மார்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் காய்கறி, பழம், பூ உள்ளிட்ட பொருட்களை விற்கின்றனர். அங்கு சில வியாபாரிகள் சாலையில் கடை அமைத்து பொருட்களை விற்-கின்றனர். இதனால் அங்கு வரும் மக்கள், வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்ப-டுகிறது. அதை தவிர்க்க, சாலையில் வியாபாரிகள் கடை வைக்கக்-கூடாது என, போலீஸ் மற்றும் நகராட்சி சார்பில் நேற்று முன்-தினம் வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதேநேரம் மீறி கடை வைத்தால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.