அழகுக்கலை, ஒப்பனை பயிற்சி எஸ்.சி., - எஸ்.டி.,யினருக்கு அழைப்பு
சேலம், 'தாட்கோ' சார்பில், எஸ்.சி., - எஸ்.டி., இளைஞர்களுக்கு, தனியார் நிறுவனத்துடன் இணைந்து, ஒப்பனை, அழகுக்கலை, டாட்டு வரைதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இப்பயிற்சியை பெற, 8 முதல், பிளஸ் 2 வரை படித்த எஸ்.சி., எஸ்.டி., இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். 60 நாட்களுக்கு, இப்பயிற்சி வழங்கப்படும். திருச்சி மாவட்டத்தில் தங்கி படிப்பதற்கான செலவின தொகை, தாட்கோ மூலம் வழங்கப்படும்.பயிற்சி முடித்ததும், தகுதியான நபர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நிறுவனம் மூலம், 15,000 முதல், 25,000 ரூபாய் வரை வருவாய் ஈட்டும்படி வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேர, tahdco.comஎனும் இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.