உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சம்பள கணக்காக மாற்றுவதால் அரசு ஊழியர்களுக்கு சலுகைகள்

சம்பள கணக்காக மாற்றுவதால் அரசு ஊழியர்களுக்கு சலுகைகள்

சேலம், தமிழக அரசு ஊழியர்கள், ஊதியம் பெறும் வங்கி சேமிப்பு கணக்கை, சம்பள கணக்காக பராமரிக்க, 7 வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விழிப்புணர்வு கூட்டம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:சம்பள கணக்காக மாற்றுவதால், வாழும்போதும், வாழ்ந்த பிறகும், இத்திட்டத்தில் அரசு ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும்படி சிறப்பு சலுகைகள், பயன்கள் உள்ளன. அரசு ஊழியர் விபத்தில் மரணம் அடைந்தாலோ அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டாலோ, 1 கோடி ரூபாய் இழப்பீடு, பணியின் போது இயற்கை மரணம் அடைந்தால் குறைந்தபட்ச ஆயுள் காப்பீடு, 10 லட்ச ரூபாய். விபத்தில் மரணம் அடைந்த ஊழியரின் மகளுக்கு, 10 லட்சம் ரூபாய். இரு மகள்கள் இருந்தால் தலா, 5 லட்சம் ரூபாய் திருமண உதவித்தொகை.அதேபோல் மகளின் உயர்கல்விக்கு, 10 லட்சம் ரூபாய் உதவித்தொகை போன்ற சலுகைகள், பட்டியலிடப்பட்ட வங்கிகளில், ஊதிய கணக்கை பராமரிக்கும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும். பிற வங்கிகளில் ஊதிய கணக்கை பராமரிப்பதில் எந்த தடையும் இல்லை. ஆனால் இச்சலுகை கிடைக்காது. வங்கிகள் வாரியாக வழங்கப்படும் சலுகை விபரங்களை எளிதாக தெரிந்து கொள்ள, களஞ்சியம் www.karuvoolam.tn.gov.in/ wen/tnta/cabpb CABPB--TNTA என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை