இருதரப்பு தகராறு 6 பேருக்கு காப்பு
தலைவாசல் :தலைவாசல், புத்துாரில் உள்ள கருப்பண்ணார், மாரியம்மன், அரியநாச்சி, பச்சைநாச்சி அம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இரு நாட்களுக்கு முன், இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தலைவாசல் போலீசார், நேற்று முன்தினம், இருதரப்பை சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில் ஒரு தரப்பை சேர்ந்த, கார்த்தி, 22, பிரகாஷ், 28, ரவி, 30, மற்றொரு தரப்பை சேர்ந்த ராஜ்குமார், 31, மனோபாலா, 26, ஜீவமுருகன், 25, ஆகியோரை, நேற்று கைது செய்த போலீசார், மற்றவர்களை தேடுகின்றனர்.