27, 28ல் பறவை கணக்கெடுப்பு ஆர்வலர், மாணவருக்கு அழைப்பு
சேலம்: சேலம் மாவட்டத்தில் வரும், 27, 28ல் பறவை கணக்கெடுப்பு நடக்க உள்ளதால், ஆர்வலர்கள், மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங்க் ரவி அறிக்கை: ஆண்டு-தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பின் ஒருங்கிணைந்த பறவை கணக்கெடுப்பு நடத்தப்ப-டுகிறது. அதன்படி வரும், 27, 28ல், சேலம் வன கோட்டமான சேர்வராயன் தெற்கு, வடக்கு, டேனிஷ்பேட்டை, மேட்டூர், ஏற்காடு, வாழப்பாடி ஆகிய வனச்சரகங்-களில், ஈர நிலங்களில் வாழும் பறவை குறித்த கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளது.இப்பணியில் வனத்துறையுடன் இணைந்து அறி-வியல் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், உயிரின ஆர்-வலர்கள், தன்னார்வலர்கள், இயற்கை ஆர்வ-லர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்-கலாம். விருப்பம் உள்ளவர்கள், அந்தந்த வனத்-துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். விபரம் பெற, வனச்சரக அலுவலர் சிவகுமாரை, 99433 55449 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.