ஆத்துார் :அ.தி.மு.க.,வின் தலைவாசல் ஒன்றிய அலுவலகத்தில், லோக்சபா தேர்தல் பணி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு தலைமை வகித்து, மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது:கடந்த, 2019ல், தி.மு.க., கூட்டணி, 38 தொகுதிகளில் வெற்றி பெற்றும் தமிழக மக்களுக்கு எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்த, 3 ஆண்டுகளில், வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டனர். தி.மு.க., - பா.ஜ., கூட்டணிகளை, தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க., கூட்டணி தான் வெற்றி பெறும்.அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவரான ஓ.பி.எஸ்.,க்கு, நீதிமன்றம் மூலம் கட்சி சின்னம், கொடி நிரந்தரமாக பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பா.ஜ., கூட்டத்தில், நீதிமன்ற உத்தரவு கூட தெரியாமல் அக்கட்சி துணைத்தலைவர் ராமலிங்கம், அ.தி.மு.க., சார்பில் ஓ.பி.எஸ்.,சை பேச அழைத்ததை வன்மையாக கண்டிக்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.கெங்கவல்லி எம்.எல்.ஏ., நல்லதம்பி, தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி உள்பட பலர் பங்கேற்றனர்