உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை திருட்டு

கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை திருட்டு

சேலம்: சேலம், கருப்பூர் அருகே மூங்கில்பாடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு சேனைக்கவுண்டனுாரை சேர்ந்த மூர்த்தி, 32, பூசா-ரியாக உள்ளார்.நேற்று முன்தினம் கோவிலை பூட்டிச்சென்றார். நேற்று காலை வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது சுவாமிக்கு அணிவித்திருந்த, ஒரு பவுன் தாலியை காணவில்லை. இதுகுறித்து நேற்று முன்தினம் அவர் அளித்த புகார்படி, கருப்பூர் போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசி-டிவி' கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் பைக்கில் சென்ற காட்சி பதிவாகி இருந்ததால், அதை வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ