இ - ஸ்கூட்டருக்கு மானியம் விண்ணப்பிக்க அழைப்பு
சேலம், சேலம் சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் சங்கீதா அறிக்கை:தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற, 2,000 உறுப்பினர்களுக்கு இ - ஸ்கூட்டர் வாங்க, மானியமாக தலா, 20,000 ரூபாய் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் பதிவு பெற்ற இணையம் சார்ந்த தொழிலாளர்கள், இத்திட்டத்தில் மானியம் பெற, tnuwwb. tn.gov.inஎன்ற இணையம் வழியே விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு, சேலம், கோரிமேட்டில் உள்ள, தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட உதவி கமிஷனர் அலுவலகத்தை நேரில் அணுகலாம். தவிர, 0427 - 2402648 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.