உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை 6 இடங்களில் முகாம்; மக்கள் மனுக்களை வழங்கலாம்

நாளை 6 இடங்களில் முகாம்; மக்கள் மனுக்களை வழங்கலாம்

சேலம்: சேலம் மாவட்டத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம், நாளை, 6 இடங்களில் நடக்க உள்ளது. அதன்படி வாழப்பாடி ஒன்றியத்தில் சிங்கிபுரம், சோமம்பட்டி, மன்னார்பாளையம், பொன்னாரம்பட்டி, விலாரிப்பாளையம் மக்கள் பயன்பெற, வாழப்பாடியில் உள்ள வாழப்பாடியார் திருமண மண்டபத்தில் முகாம் நடக்க உள்ளது.அதேபோல் ஓமலுார் ஒன்றியத்தில் கோட்டமேட்டுப்பட்டி, கோட்ட கவுண்டம்பட்டி, எட்டிகுட்டப்பட்டி, சங்கீதப்பட்டி, நார-ணம்பாளையம் மக்களுக்கு, கோட்டமேட்டுப்பட்டி ஜெயந்தி மகால்; கொளத்துார் ஒன்றியத்தில் கண்ணாமூச்சி, பாலமலை மக்-களுக்கு கண்ணாமூச்சி ஊராட்சி அலுவலகம்; பெத்தநாயக்கன்பா-ளையம் ஒன்றியத்தில் வைத்தியகவுண்டன்புதுார், ஏ.கரடிப்பட்டி, புத்திரகவுண்டம்பாளையம் உள்ளிட்ட மக்களுக்கு வைத்தியக-வுண்டன்புதுார் ஐஸ்வர்ய பெருமாள் திருமண மண்டபத்தில் முகாம் நடக்க உள்ளது.கெங்கவல்லி ஒன்றியத்தில், 74 கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட மக்க-ளுக்கு, கூடமலை கிருஷ்ணா திருமண மண்டபம்; சங்ககிரி ஒன்றி-யத்தில் மோரூர் உள்ளிட்ட கிராம மக்களுக்கு சங்ககிரி பார்வ-திபாய் திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது. சம்பந்தப்பட்ட கிராம மக்கள், முகாமில் மனுக்களை கொடுத்து பயன்பெற, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை