உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வனத்துறை அலுவலர்களுக்கு மிரட்டல் முன்னாள் ஊராட்சி தலைவர் மீது வழக்கு

வனத்துறை அலுவலர்களுக்கு மிரட்டல் முன்னாள் ஊராட்சி தலைவர் மீது வழக்கு

கொளத்துார்,: கொளத்துார் ஒன்றியம், கருங்கல்லுார் ஊராட்சி முன்னாள் தலைவர் சின்னப்பன், 58; பா.ம.க., சேலம் மேற்கு மாவட்ட துணை தலைவராக உள்ளார். கருங்கல்லுார் அடுத்த மூலக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன், 56. இவர் தன் வீட்டில் கருங்காலி கட்டைகளை பதுக்கி வைத்து, திருப்பூருக்கு கடத்துவதாக மேட்டூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.நேற்று முன்தினம் இரவு மேட்டூர் வனச்சரகர் சுரேஷ்குமார் தலைமையில், வன அலுவலர்கள் மகேந்திரன் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு கருப்பு நிற மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. 3 டன் எடையுள்ள கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து தங்கள் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். அப்போது அங்கு வந்த சின்னப்பன், வன அலுவலர்களிடம் ஆபாசமாக பேசி வாக்குவாதம் செய்து, அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தெரிகிறது.இது குறித்து, நேற்று வனச்சரகர் சுரேஷ்குமார் கொடுத்த புகார்படி, கொளத்துார் போலீசார் சின்னப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி