உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாலை குறித்து அவதுாறு 2 பேர் மீது வழக்கு

சாலை குறித்து அவதுாறு 2 பேர் மீது வழக்கு

மேட்டூர்: மேச்சேரி, கூணான்டியூர் ஊராட்சி கீரைக்-கானுார் அருகே வேவேரியன்காட்டுவளவு, பட்டுவாயன் தெருவில், 'நபார்டு' திட்டம், 2024 - 25ல், தார்ச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. அப்-பணி நிறைவடைய உள்ள நிலையில், அப்பகு-தியை சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் குமார், செல்வம் ஆகியோர், கடந்த, 18ல் சில இடங்களில் சாலையை தோண்டி தரம் குறைவாக இருப்பதாக மக்களிடம் கூறினர்.இதனால் ஒன்றிய கமிஷனர் ரேவதி, நேற்று மேச்சேரி போலீசில் புகார் செய்தார். அதில் அரசு சொத்தை சேதப்படுத்தி அவதுாறு பரப்பிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார். இதனால் அவர்கள் மீது வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை