மேலும் செய்திகள்
மெடிக்கலில் ரூ.8.70 லட்சம் கையாடல்
01-Mar-2025
தாரமங்கலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே சிக்கம்பட்டி, குப்பனுாரை சேர்ந்தவர் செல்வி, 58. இவரது தாய் பச்சியம்மாள் பெயரில் ஒரு ஏக்கர் நிலம் இருந்தது. அதில் சிறிது நிலத்தை, 2009ல், செல்வியின் சகோதரர்கள் பெரியசாமி, இளங்கோவுக்கு பாகப்பிரிவினை செய்துள்ளனர். மீதி நிலம், கிணறு, பச்சியம்மாள் பெயரில் இருந்தது. கடந்த, 2024ல் பச்சியம்மாள் இறந்தார். சொத்துகளை பிரித்துக்கொள்ள, சகோதரர், சகோதரிகளை, செல்வி அழைத்தார். பெரியசாமி காலம் கடத்தியுள்ளார்.பச்சியம்மாள் இறப்பதற்கு முன், அதே பகுதியை சேர்ந்த ராமசாமி துாண்டுதல்படி, பெரியசாமி, அவரது தாய், சகோதரர், சகோதரிகளுக்கு தெரியாமல், 2023ல் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தார். அப்போதைய சிக்கம்பட்டி வி.ஏ.ஓ., தாண்டாகவுண்டன், ஓமலுார் மண்டல துணை தாசில்தார் ராஜ்குமார், மற்றவர்கள் பெயரை நீக்கி, பட்டாவும் வழங்கினர்.தொடர்ந்து ராமசாமி, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையை சேர்ந்த பச்சியம்மாள் பெயர் கொண்ட ஒருவரை, சிக்கம்பட்டி பச்சியம்மாள் போன்று, போலி ஆதார் கார்டு தயாரித்துள்ளார். தொடர்ந்து, 2024 ஆக., 23ல், தாரமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு நடந்தது. அதற்கு சாட்சிகளாக, சிக்கம்பட்டியை சேர்ந்த பிரகாசம், சிவபிரகாசம் இருந்தனர். இதுகுறித்து, சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் அளிக்கப்பட்டது. தாரமங்கலம் போலீசார், ராமசாமி, பெரியசாமி, சிவபிரகாசம், பிரகாசம், ஊத்தங்கரையை சேர்ந்த பச்சியம்மாள் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
01-Mar-2025