உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.2.47 லட்சம் மோசடி வாலிபர் மீது வழக்கு

ரூ.2.47 லட்சம் மோசடி வாலிபர் மீது வழக்கு

தாரமங்கலம்: தாரமங்கலம், போஸ்ட் ஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த், 25. பெங்களூரில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். இரு ஆண்-டுகளுக்கு முன், பவளத்தானுார் அருகே ஆவின் பாலகத்துக்கு சென்றபோது, கோட்டமேட்டுப்பட்டியை சேர்ந்த ராஜேஷ், 31, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.பிரசாந்த், 'என்பீல்டு' பைக் வாங்குவதாக, நண்பர்களுடன் பேசி-யதை கேட்ட ராஜேஷ், குறைந்த விலையில் வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதை நம்பி, ராஜேஷ் பணம் கேட்கும்போது, 'ஜிபே' மூலம், பல்வேறு தவணையாக, 2.47 லட்சம் ரூபாயை, பிரசாந்த் அனுப்பியுள்ளார்.ஆனால், இரு ஆண்டாகியும் பைக் வாங்கி தரவில்லை. இதனால் பிரசாந்த் புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரித்து, நேற்று, ராஜேஷ் மீது வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை