உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாழப்பாடி அருகே நகைக் கடையில் நூதன மோசடி: பெண் கைது

வாழப்பாடி அருகே நகைக் கடையில் நூதன மோசடி: பெண் கைது

வாழப்பாடி;வாழப்பாடி அருகே நகை கடையில் முஸ்லிம் போன்று 'பர்தா' அணிந்து கவரிங் நகைகளை கொடுத்து, பவுன் நகைகளை வாங்கிச் சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் நகை கடையில், கடந்த 14ல் மதியம் 3 மணி அளவில், பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர், பழைய தங்க நகை எனக் கூறி,9 பவுன் எடையுள்ள 3 செயினை மேலாளர் மணிகண்டனிடம் கொடுத்துவிட்டு, தங்க ஆரம், தங்க செயின் என 7.1/2 பவுன் தங்க நகைகளை வாங்கிச் சென்றுள்ளார். இதன்பின்னர், 3 செயினையும் தரம் பார்த்தபோது கவரிங் நகைகள் என தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து, நம்பிக்கை மோசடி செய்துள்ளதாக, நகை கடை மேலாளர் துக்கியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 38. என்பவர் கொடுத்த புகாரின் பேரில், வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து, தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து நேற்று, சேலம் அருகே சீலநாயக்கன்பட்டி, மதுரை வீரன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மதன் மனைவி ராதா, 35. என்பவரை கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில்:சேலம் மாவட்டம் பேளூர் பகுதியில் நகை கடையில் நடைபெற்ற மோசடி போலவே, அவிநாசி பகுதியில் நகை கடையில் சமீபத்தில் மோசடி நடைபெற்றுள்ளது. இதில் இரண்டு மோசடியும் ஒரே மாதிரி நடைபெற்றதால், இச்சம்பவத்தில் ஈடுபடுவது ஒரே பெண் என தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், சிசிடிவி காட்சி உள்ளிட்ட தடயங்களை கைப்பற்றி நடத்திய விசாரணையில், சேலம் அருகே சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ராதா என்பவர், இதுபோன்று, மதுரை, காட்பாடி, சென்னை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நகைக் கடையில் கவரிங் நகைகளை கொடுத்து, பவுன் நகைகளை பெற்றுச் சென்று தொடர் மோசடியில் ஈடுபட்டதும், இவர் மீது 10க்கும் மேற்பட்டவழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து சேலம் அருகே தலைமறைவாக இருந்த ராதாவை இன்று மாலை 6 மணி அளவில், தனிப்படை போலீசார் கைது செய்தனர். கூட்டம் அதிகமாக உள்ள சில குறிப்பிட்ட கடைகளை தேர்ந்தெடுத்து, பவுன் நகை போன்றே கவரிங் நகைகளை கொடுத்து, பவுன் நகைகளை பெற்றுச் சென்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரிடம் 7.1/2 பவுன் நகையை பறிமுதல் செய்து விசாரணை நடக்கிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ