உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சைரன் காரில் வலம் வந்ததால் தலைமை செயலக புரோக்கர்கள் கைது

சைரன் காரில் வலம் வந்ததால் தலைமை செயலக புரோக்கர்கள் கைது

சேலம் : 'சைரன்' வைத்த காரில் வலம் வந்ததால் சென்னை தலைமை செயலக புரோக்கர்கள், 2 பேரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, திருவான்மியூர், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் திருமால், 49. பழைய பெருங்களத்துார், முத்தமிழ் நகரை சேர்ந்தவர் கருப்பையா, 60. இவர் மின்சார துறையில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இருவரும் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அதிகாரிகள், எம்.எல்.ஏ.,க்களிடம் நெருக்கம் காட்டி புரோக்கர்களாக செயல்பட்டனர்.கருப்பையாவின் சகோதரி மகன் பிரகாஷ், 32. இவர், திருமால், கருப்பையாவிடம், 17 லட்சம் ரூபாயை பெற்று தலைமறைவானார். இதனால் இருவரும், பிரகா ைஷ தேடி போலி அரசு முத்திரை, சைரன் பொருத்திய, 'இன்னோவா' காரில், நேற்று முன்தினம் ஊட்டி, கோவை சென்றுவிட்டு சென்னை திரும்பிக்கொண்டிருந்தனர். இவர்களின் கார், சேலம் மாவட்டம் அரியானுார் அருகே வந்தபோது, அங்குள்ள சோதனைச்சாவடியில், கொண்டலாம்பட்டி போலீசார், காரை நிறுத்தி சோதனை செய்தனர். திருமால், கருப்பையாவிடம் அரசு அதிகாரிகளுக்குரிய அடையாள அட்டைகள் உள்ளிட்ட போலி ஆவணங்கள் இருப்பது தெரிந்தது. காருடன் ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ