| ADDED : ஜன 25, 2024 12:54 PM
சேலம்: டியூசனுக்கு வந்த, 8 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சேலம், சின்னகொல்லப்பட்டி, இந்திரா நகரை சேர்ந்தவர் விக்னேஷ், 35. இவர் எம்.பில்., படித்துவிட்டு, வீட்டிலேயே பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு டியூசன் நடத்தி வந்துள்ளார். கடந்த, 2022 மார்ச், 27ல், டியூசனுக்கு வந்த மூன்றாம் வகுப்பு படிக்கும், 8 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில், அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விக்னே ைஷ கைது செய்தனர்.இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், விக்னேஷூக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பளித்தார்.