உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உலிபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு அலுவலருக்கு கலெக்டர் அறிவுரை

உலிபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு அலுவலருக்கு கலெக்டர் அறிவுரை

ஆத்துார் : ஆத்துார் அருகே உலிபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது. அதேபோல் வரும், 25ல் தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்க காளைகளை, அதன் உரிமையாளர்களும், ஏராளமான வீரர்களும் பதிவு செய்துள்ளனர். இப்போட்டி நடக்கும் இடங்களில், விழா ஏற்பாடு குறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் வருவாய், போலீஸ், பொதுப்பணி, மின்வாரியம், கால்நடை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், நேற்று ஆய்வு செய்தனர்.அப்போது தடுப்பு வேலி, பாதுகாப்பு அம்சம், பார்வையாளர் பகுதி, காளைகளை அழைத்து வரும் பாதையில் தடுப்பு அமைத்தல், மருத்துவம், கழிப்பறை உள்ளிட்டவை குறித்து, கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து காளைகளை பரிசோதனை செய்து உடல் தகுதி சான்றிதழ் வழங்க வேண்டும்; பிராணிகள் நலவாரியத்தில் அனுமதிக்கப்பட்ட காளைகள் மட்டும் பங்கேற்க வேண்டும்; காளைகளின் கொம்பு கூர்மையாக இருந்தால் அவற்றின் மீது மரக்கவசம் அமைப்பது அவசியம்; கால்நடைகளுக்கு தேவையான வசதிகளை செய்ய, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி, கால்நடை மண்டல இணை இயக்குனர் செல்வக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி