உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பள்ளி மாணவியிடம் சீண்டல் கல்லுாரி மாணவர் கைது

பள்ளி மாணவியிடம் சீண்டல் கல்லுாரி மாணவர் கைது

சங்ககிரி: சங்ககிரி, தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த, 18 வயது சிறுவன், கல்லுாரியில் படிக்கிறார். இவர் நேற்று முன்தினம் இரவு, புள்ளிபாளையத்தை சேர்ந்த, 15 வயது சிறுமியின் வீட்டில், பின்புற-மாக புகுந்து, அவரை பலாத்காரம் செய்ய முயன்றார்.அப்போது, வீட்டின் முன்பகுதியில் இருந்து மாணவியின் தாய் வந்து, மாணவரை கண்டித்தார். அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். இதுகுறித்து மாணவியின் தாய் புகார்படி, சங்ககிரி மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிந்து, மாணவரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ