உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செக்கான் ஏரி நிரம்பியதால் எம்.எல்.ஏ.,வுக்கு வாழ்த்து

செக்கான் ஏரி நிரம்பியதால் எம்.எல்.ஏ.,வுக்கு வாழ்த்து

மேட்டூர்: நங்கவள்ளி, கோனுார் ஊராட்சி சந்தைதானம்பட்டியில், 7 ஏக்கரில் செக்கானுார் ஏரி உள்ளது. இந்த ஏரி, மேட்டூர் அணை உபரிநீர் பாசன திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.அதை சேர்க்கக்கோரி, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து சேர்க்கப்பட்ட நிலையில், சமீபத்தில் செக்கான் ஏரி நிரம்பியது. இதனால் நேற்று, அந்த ஏரியில் மலர் துாவி, எம்.எல்.ஏ., மகிழ்ந்தார். அவருக்கு விவசாயிகள் சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ