உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போதையில் தகராறு; நண்பர் மீது ஆசிட் வீச்சு

போதையில் தகராறு; நண்பர் மீது ஆசிட் வீச்சு

சேலம் : சேலம், செவ்வாய்ப்பேட்டை, நரசிம்மசெட்டி சாலையை சேர்ந்தவர் ரமேஷ், 30. ராவணேஸ்வரர் நகரை சேர்ந்தவர் தங்கராஜ், 27. நண்பர்களான இருவரும், வெள்ளி பட்டறையில் பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் இரவு, செவ்வாய்ப்பேட்டையில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ரமேஷ், தங்கராஜை அடித்துள்ளார். ஆத்திரமடைந்த தங்கராஜ், வீட்டுக்கு சென்று வெள்ளி பட்டறையில் பயன்படுத்தும், 'சல்பர்' ஆசிட்டை எடுத்து வந்து ரமேஷ் மீது ஊற்றிவிட்டு தப்பியுள்ளார். படுகாயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.டிரைவர் கவலைக்கிடம்பனமரத்துப்பட்டி அடுத்த குள்ளப்பநாயக்கனுாரை சேர்ந்த கார் டிரைவர் சங்கர் கணேஷ், 35. நேற்று முன்தினம் நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் மது அருந்தினார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், சங்கர் கணேஷ் தாக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில், சீலநாயக்கன்பட்டியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பனமரத்துப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி