பொக்லைனை சிறைபிடித்த மக்கள் விடுவித்த போலீசால் சர்ச்சை
தாரமங்கலம், தாரமங்கலம், ஆரூர்பட்டி ஏரியில் பொக்லைன் மூலம், நேற்று சிலர் மண் அள்ளிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற மக்கள், மண் அள்ளுவதை தடுத்து, பொக்லைனை சிறைபிடித்தனர். தொடர்ந்து உதவி எண்: 100க்கு புகார் அளித்தனர்.தொடர்ந்து தாரமங்கலம் போலீசார் வந்தனர். அவர்கள் கூறுகையில், 'சாலை பணிக்கு அனுமதி இருந்தால் ஏரியில் மண் அள்ளிக்கொள்ளலாம். ஏரியில் மண் எடுக்க ஓமலுார் தாசில்தார் ரவிக்குமாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றனர்.அதற்கு மக்கள், 'சாலை பணிக்கு எப்படி ஏரியில் மண் எடுக்க அனுமதி கொடுக்க முடியும்' என கேட்டனர். அதற்கு போலீசார், 'இதுபற்றி தாசில்தாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்' என்றனர்.இதையடுத்து, அங்கு மண் அள்ளக்கூடாது என, பொக்லைனை விடுவித்து, போலீசார் அனுப்பிவைத்தனர். பின் தாசில்தார், கலெக்டர் அலுவலகத்தில் முறையிடுவதாக கூறி மக்கள் கலைந்து சென்றனர்.