உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விமான நிலையத்தில் பயணியர் கூட்டம்

விமான நிலையத்தில் பயணியர் கூட்டம்

ஓமலுார்: தீபாவளி தொடர் விடுமுறை நேற்றுடன் முடிந்தது. இதனால் சொந்த ஊர்களிலிருந்து பணியிடங்களுக்கு செல்ல, சேலம் விமான நிலையத்துக்கு வந்து, சென்னை, கொச்சின், பெங்களூரு, ஹைதராபாத் பகுதிகளுக்கு விரைவாக செல்ல, நேற்று ஏராளமானோர் விமானத்தை பயன்படுத்தினர். இதனால் சேலம் விமான நிலையத்தில் பயணியர் கூட்டம் அலைமோதியது. பயணம் செய்வோர், உடன் வருவோர் என, ஏராளமானோர் குவிந்தனர். அனைத்து தடத்தில் உள்ள பயணியர் டிக்கெட்டுகளும், 'புக்கிங்' செய்யப்பட்டதால், கடைசி நேரத்தில் வந்த பலர், டிக்கெட் கிடைக்காமல் திரும்பிச்சென்றனர். மேலும் விமான நிலையத்திலும் கார்கள் அதிகளவில் காணப்பட்டன. விமான நிலைய போலீசார், தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !