| ADDED : ஜூலை 11, 2024 12:56 AM
சேலம்: சேலம், 2ம் அக்ரஹாரத்தில் உள்ள லட்சுமி நாராயணர் கோவில் கும்பாபி ேஷகம், நாளை நடக்க உள்ளது. இதற்கான பணி, கோவில் நிர்வாகம், அறநிலைத்துறை சார்பில் நடந்து வருகிறது. அப்பணியை நேற்று, ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர் பார்வையிட்டு தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது: இக்கோவில், 300 ஆண்டு பழமையானது. இதுபோன்ற அமைப்-புள்ள சுவாமி விக்ரகங்களை பார்ப்பது அரிது. அந்த காலத்தில் இதுபோன்ற விக்ரகங்களை எப்படி அமைத்தனர் என தெரிய-வில்லை. மிக சக்தி வாய்ந்த லட்சுமி நாராயணர், இங்கு எழுந்த-ருளி உள்ளார். இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்துக்கு செல்வோர், கோவில் இடது புறம் உள்ள லட்சுமி நாராயணரை தரிசித்து விட்டு ஆண்டளை வணங்குவர். அறநிலை துறையில் ஆங்காங்கே சில குறைகள் உள்ளன. அதை உடனே அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும். அறநிலைத்துறை அமைச்சராக உள்ள சேகர் பாபு, குறைகளை கேட்டுள்ளார். நிவர்த்தி செய்து தருவார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.