உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மஹா சிவராத்திரியை ஒட்டி விடிய விடிய பக்தர்கள் தரிசனம்

மஹா சிவராத்திரியை ஒட்டி விடிய விடிய பக்தர்கள் தரிசனம்

சேலம், சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி, பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மனுக்கு, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உட்பட பல்வேறு திரவியங்களால் அபி ேஷகம் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு முதல் கால பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, இரவு, 2:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அதிகாலை, 4:00 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது. விடிய விடிய நடந்த பூஜைகளில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.* இரண்டாவது அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோவில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில், சீரகாபாடி 1008 சிவாலயம், கோரிமேடு என்.ஜி.ஜி.ஓ., காலனி ஞானாம்பிகை உடனுறை ருத்ரேஸ்வரர் கோவில்களில் நடந்த பூஜைகளில் பக்தர்கள் வழிபட்டனர். மேலும் மாவட்டத்தில் பல்வேறு சிவன் கோவில்களில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ