உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குண்டுமல்லி உற்பத்தி சரிவு

குண்டுமல்லி உற்பத்தி சரிவு

பனமரத்துப்பட்டி : சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் பள்ளிதெருப்பட்டி, பெரமனுார், வாழக்குட்டப்பட்டி, பனமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 150 ஏக்கரில் குண்டுமல்லி செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. ஆனால் ஒரு மாதமாக, குளிர், பனி, மழை என பருவ நிலை மாறியதால், மல்லி உற்பத்தி சரிந்துள்ளது. ஆரம்ப நிலையில் உள்ள அரும்பு, பனிப்பொழிவால் வளர்ச்சி குன்றி விடுகிறது. அதை மீறி வளரும் சிறு மொக்குகளை புழுக்கள் சாப்பிட்டு விடுகின்றன. இதனால் பூ உற்பத்தியின்றி செடிகள் வெறுமையாக காணப்படுகின்றன. உற்பத்தி குறைவால், சேலத்தில் ஒரு கிலோ குண்டுமல்லிக்கு, 800 ரூபாய் விலை கிடைக்கிறது. இருப்பினும் மல்லி பயிரிட்ட விவசாயிகள், வருவாய் இழந்து தவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை