உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆட்டோ நல வாரியம் அமைக்க கோரிக்கை

ஆட்டோ நல வாரியம் அமைக்க கோரிக்கை

சேலம்:அ.தி.மு.க.,வின், சேலம் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை, அண்ணா ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க பிரிவு பொதுக்குழு கூட்டம், நெடுஞ்சாலை நகரில் உள்ள கட்சி அலுவ-லகத்தில் நேற்று நடந்தது. தலைவர் தம்பிமூர்த்தி தலைமை வகித்தார்.அதில் மாநகர் மாவட்ட செயலர் பாலு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலர் சுந்தரபாண்டியன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் கதிர்வேல் உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து, பொதுச்செயலர், இ.பி.எஸ்.,சை முதல்வராக்க உழைத்தல்; ஆட்டோ நல வாரியம் அமைத்தல்; ஆட்டோ, தொழிலாளர் ஓய்வூதியம், 3,000 ரூபாய் வழங்குதல்; தொழி-லாளர் குழந்தைகளுக்கு நலவாரியம் மூலம் கல்வி நிதி வழங்-குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்-பட்டன. தொழிற்சங்க பிரிவு இணை செயலர் புரு ேஷாத்தமன், செயலர் அன்பு, பொருளாளர் இஸ்மாயில், துணைத்தலைவர்கள் உள்-ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை