உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கனவு இல்ல திட்டத்தில் நிர்பந்தம் ஊரக வளர்ச்சி அலுவலர் ஆர்ப்பாட்டம்

கனவு இல்ல திட்டத்தில் நிர்பந்தம் ஊரக வளர்ச்சி அலுவலர் ஆர்ப்பாட்டம்

சேலம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், சேலம் மாவட்டம் ஆத்துார் ஒன்றிய அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. வட்டார துணைத்தலைவர் கார்த்தி தலைமை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் வெங்கட்ரமணன், பரமசிவம் கோரிக்கைகள் குறித்து பேசினர். தொடர்ந்து, கலைஞரின் கனவு இல்ல திட்டங்களுக்கு போதிய அலுவலர், பணியாளர்களை நியமித்தல்; இத்திட்ட பயனாளர் தேர்வு குறித்து திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை உடனே வெளியிடுதல்; பயனாளர் பட்டியலை இறுதிப்படுத்த உரிய காலம் அவகாசம் வழங்குதல்; அலுவலர்களை நிர்பந்தம் செய்வதை தவிர்க்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.அதேபோல் பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில், மதிய உணவு இடைவேளையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெரியசாமி தலைமை வகித்தார். அதில், 'அரசின் செயல்பாடு சுவர் இல்லாமல் சித்திரம் வரைய நிர்பந்தம் செய்வது போல் உள்ளது. இத்திட்டங்களுக்கு போதிய ஊழியர்கள், கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்' என வலியுறுத்தி பேசினர். வட்ட கிளை தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அலுவலகத்தில், மாநில துணைத்தலைவர் திருவேரங்கன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் விவேகாந்தன், வட்டார தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.வீரபாண்டி ஒன்றிய அலுவலகம் முன், மாவட்ட துணை தலைவர் பழனிவேல் தலைமையில் ஒன்றிய அலுவலர்கள், ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை