உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீட்டு மனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

வீட்டு மனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

சேலம்: இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின், கெங்கவல்லி தாலுகா குழு சார்பில் சேலம், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலர் நாகராஜ் தலைமை வகித்தார். அதில் தம்மம்பட்டியில் நத்தம் புறம்போக்கில், 30 ஆண்டுகளுக்கு மேல் வீடுகட்டி வசிக்கும் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். அதில் குறிப்பிட்ட நிலம் யார் பெயரில் உள்ளது என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு போலி பட்டாவை ரத்து செய்தல்; தம்மம்பட்டி காந்தி நகர், செங்கொடி நகர், மண்கரடு நத்தம் நிலத்தில் வீடுகட்டி, 30 ஆண்டாக வசிப்போருக்கு பட்டா தேவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாநில தலைவர் ராஜகோபால், மாவட்ட செயலர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ