உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கலைக்கல்லுாரி முன் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கலைக்கல்லுாரி முன் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம்: சேலம் அரசு கலைக்கல்லுாரி முன், கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழக அரசு கலைக்கல்லுாரிகளில், பணிபுரியும் கவுரவ விரிவுரை-யாளர்களுக்கு, யு.ஜி.சி., அறிவித்த ஊதியம் மற்றும் பணி நிரந்-தரம் குறித்த, நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்த வலியுறுத்தி, நேற்று சேலம் அரசு கலைக்கல்லுாரி முன், கவுரவ விரிவுரையா-ளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதுகுறித்து, ஒருங்கிணைப்பா-ளர்கள் முத்துநகை, மணிவண்ணன் ஆகியோர் பேசியதாவது:தமிழகத்தில் உள்ள, 164 அரசு கலைக்கல்லுாரிகளில், 7,360 கவுரவ விரிவுரையாளர்கள், 25 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் பணிபு-ரிந்து வருகின்றனர். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது, தமி-ழக உயர்கல்வித்துறை மிக குறைந்த சம்பளம் வழங்குகிறது. யு.ஜி.சி., அறிவித்த சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை