உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதியவர் உடலை வாங்க 2ம் நாளாக மறுப்பு

முதியவர் உடலை வாங்க 2ம் நாளாக மறுப்பு

சேலம் : முதியவரை அடித்துக்கொன்ற வழக்கில், அவரது உடலை வாங்க, 2ம் நாளாக மறுத்த உறவினர்கள், தர்ணாவில் ஈடுபட்டு, ஆர்.ஐ.,யை கைது செய்ய கோரிக்கை விடுத்தனர்.ஆத்துார் அருகே கீரிப்பட்டி, மேல் தொம்பையை சேர்ந்தவர் ஜோதிவேல், 60. இவருக்கும், பக்கத்து நிலத்தை சேர்ந்த விவசாயி ராஜி, 67, என்பவருக்கும் இடையே, வரப்பு ஓரம் உள்ள மரங்கள், விவசாய நிலத்தில் விழுவது தொடர்பாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. கடந்த ஏப்., 30ல், இரு தரப்பினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஜோதிவேல் உயிரிழந்தார்.ஜோதிவேல் மனைவி லீலாவதி புகாரில் ராஜி, அவரது மருமகனும், கள்ளக்குறிச்சி, வெள்ளிமலை ஆர்.ஐ., வெங்கடேஷ், உறவினர்கள் அருள்மணி, 29, வினோ, 37, ஆகியோர் மீது மல்லியக்கரை போலீசார், கொலை வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ராஜி, அருள்மணி, வினோ ஆகியோரை நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஆர்.ஐ., தலைமறைவாக உள்ளார். நேற்று முன்தினம், ஜோதிவேலின் உடலை பிரேத சோதனை செய்து, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால், ஆர்.ஐ.,யை கைது செய்யக்கோரி, ஜோதிவேல் உடலை வாங்க மறுத்துவிட்டனர். மேலும் சேலம் கலெக்டர் அலுவலகம் முன், ஜோதிவேல் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். 2ம் நாளாக நேற்றும், கலெக்டர் அலுவலகம் முன், ஜோதிவேல் குடும்பத்தினர், உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'ஆர்.ஐ.,யை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பேச்சு நடத்தியபோதும், 2ம் நாளாக உடலை வாங்க மறுத்துவிட்டனர்' என்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை