பள்ளியில் கதண்டு கூடு அழிப்பு
கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் பயன்படுத்தாமல் உள்ள வகுப்பறையில் கதண்டு கூடு இருந்தது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் சின்னையன் தகவல்படி, நேற்று மதியம், அங்கு சென்ற கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், கதண்டு கூட்டை அழித்தனர்.