உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முன்பதிவு கவுன்டர்களில்டிஜிட்டல் பரிவர்த்தனை

முன்பதிவு கவுன்டர்களில்டிஜிட்டல் பரிவர்த்தனை

'முன்பதிவு கவுன்டர்களில்டிஜிட்டல் பரிவர்த்தனை'சேலம் சேலம் ரயில்வே கோட்ட பிரிவு பயனர் ஆலோசனை குழுவின், 27வது கூட்டம் ஜங்ஷனில் நேற்று நடந்தது. கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா தலைமை வகித்து பேசியதாவது:முன்பதிவு கவுன்டர்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை செயல்படுத்தப்பட்டுள்ளது. பல ஸ்டேஷன்களில் நடைபாதை பாலங்கள், லிப்ட், எஸ்கலேட்டர்கள், கழிப்பறை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் உறுப்பினர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். கூடுதல் மேலாளர் சிவலிங்கம், வணிக மேலாளர் பூபதிராஜா, கோட்ட செயல்பாட்டு மேலாளர் அனித் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ