| ADDED : ஆக 05, 2011 02:09 AM
மேட்டூர்: திருமணம் ஆகாத லாரி டிரைவர், மேச்சேரியில் உள்ள லாட்ஜில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரி மாவட்டம், ஏரியூரை சேர்ந்தவர் லாரி டிரைவர் குருமூர்த்தி (38). திருமணம் ஆகாத குருமூர்த்திக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. உடல் நலம் பாதித்த குருமூர்த்தி, பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நேற்று முன்தினம், மேச்சேரி நாகம்மாள் காம்ப்ளக்ஸில் உள்ள அறையில் தங்கிய குருமூர்த்தி, திருமணம் ஆகாத விரக்தியாலும், உடல் நலம் பாதித்ததாலும் இரவில் ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மேச்சேரி போலீஸார், பிரேதத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் லட்சுமணன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.